செய்திகள்

தேசியக் கட்சிகள் மூலமாகவே மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு: அங்கஜன்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ்.மாவட்ட அமைப்­பா­ளரும் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான அங்­கஜன் இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

தேசியக் கட்­சி­க­ளூ­டா­கவே மக்கள் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் என்­பதை இலக்­காகக்­கொண்டே சுதந்­திரக் கட்­சியில் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக தெரி­வித்­தவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களைக் குழப்­பு­வது எனது நோக்­க­மல்ல எனவும் குறிப்­பிட்டார். யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

கடந்த காலங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்­பாக வட­மா­கா­ணத்தில் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்கி இருக்­காத நிலை­யொன்று இருந்­தது. இது எமது கட்சி விட்ட பெருந்­த­வ­றா­கவே உள்­ளது.

மாறாக எமது கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பில் முகவர் அர­சியல் கட்­சி­களே வட­மா­கா­ணத்தில் போட்­டி­யிட்­டி­ருந்­தன. இதனால் எமது கட்­சிக்­கான பிர­தி­நி­தித்­து­வங்கள் பெற­மு­டி­யா­த­தொரு நிலை இருந்­தது. முன்­ன­தாக 2010ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்­த­போதும் என்னால் வெற்­றி­பெற முடி­யாது போயி­ருந்­தது. இருப்­பினும் மக்கள் சேவை­களைத் தொடர்ச்­சி­யாக அமைப்­பாளர் என்ற அடிப்­ப­டையில் மேற்­கொண்டு வந்தேன். இதன் பல­னாக கடந்த வட­மா­காண சபைத் தேர்­தலில் நான் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருந்தேன்.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தில் கள­மி­றங்­கு­மாறு என்­னிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு நான் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்ளேன்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது இலக்­கு­களை மைய­மாக வைத்து செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.அவர்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாடு என்­னி­ட­மில்லை. அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்கு என்றும் தயா­ரா­க­வுள்ளேன். அவர்­களின் செயற்­பா­டு­களை குழப்­பு­வது எனது நோக்­க­மல்ல. ஆனால் எமது மக்­க­ளுக்கு காணப்­படும் அடிப்­படைப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தேசிய கட்­சி­களின் ஊடா­கவே முடியும். இது­வரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு பிர­தி­நிதி ஒருவர் இல்­லாத நிலையே காணப்படுகின்றது. ஆகையால் எமது பிரதிநிதித்துவம் அக்கட்சியில் உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ளது.

இதன்மூலம் எமது அன்றாட பிரச்சினைகள் உட்பட இனப் பிரச்சினைக்கும் உரிய தீர்வினை எட்டுவதற்கு இலகுவான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.