செய்திகள்

தேசிய அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளும் முன்வரவேண்டும்: மைத்திரி அழைப்பு

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கு தான் அனைத்துக் கட்சிகளையும் அழைப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அழைப்பு விடு;துள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த மைத்திரிபால, மகாசங்கத்தினரைச் சந்தித்து அவர்களுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் கண்டியின் சரித்திரப் பிரசித்தி பெற்ற தலாதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றிய அவர், நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இன, மத மொழி ரீதியான வேறுபாடுகளைக் கைவிட்டு நாட்டை முன்னேற்றுவதற்கு வசதியாக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்காக தாம் அமைக்கவிருக்கும் தேசிய அரசாங்கத்திலும் அனைத்துக் கட்சிகளும் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.