செய்திகள்

தேசிய அரசுக்கு ஆதரவளித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் நான்தான்: நிமல் சிறிபால டி சில்வா

தேசிய அர­சாங்­கத்­துக்கு நாங்கள் ஆத­ர­வ­ளித்­தாலும் நானே எதிர்க்­கட்சித் தலைவர். நான் அந்தப் பத­வியை விட்டு வில­க­மாட்டேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கரங்­களை பலப்­ப­டுத்­தவே சுதந்­திரக் கட்­சியின் 26 பேர் அமைச்சுப் பத­வி­களை பெற்­றுள்­ளனர். நாங்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணை­ய­வில்லை. 100 நாள் வேலைத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காகவே அரசுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது

“தேசிய அர­சாங்கம் பற்றி தொடர்ந்து பேசப்­பட்­டு­வந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுவும் மத்­திய குழுவும் தேசிய அர­சாங்கம் அமைக்க இணங்­கி­யது. அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன இந்த நாட்டின் தலை­வ­ரா­கவும் எமது கட்­சியின் தலை­வ­ரா­கவும் இருக்­கின்றார்.

எனவே அவரின் கரங்­களை பலப்­ப­டுத்தி 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் நோக்கில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ளோம். எமது கட்­சியின் 26 பேர் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­றுள்­ளனர். இறைச்­சுக்கும் முல்­லுக்கும் நாங்கள் அர­சாங்­கத்தில் இணை­ய­வில்லை. மாறாக 100 நாள் வேலைத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான வர­லாற்று விட­யத்தை முன்­னெ­டுக்­கவே ஆத­ரவு வழங்­கு­கின்றோம்.

ஆனால் சுதந்­திரக் கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் அமைச்சுப் பத­வி­களை பெற்று ஜனா­தி­ப­தியின் கரங்­களை பலப்­ப­டுத்­தி­னாலும் பெரும்­பா­னமை உறுப்­பி­னர்கள் எதி­ர­ணி­யி­லேயே உள்­ளனர். எனவே நாங்கள் எதிர்க்­கட்­சியின் வகி­பா­கத்தை முன்­னெ­டுப்போம். அர­சாங்­கத்தை விமர்­சிக்­க­வேண்­டு­மாயின் விமர்­சிப்போம். மேலும் எமது கட்­சியின் தனித்­து­வத்தை இழக்­க­மாட்டோம். தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம் என்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நாங்கள் இணைந்­து­விட்­ட­தாக அர்த்தம் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.