செய்திகள்

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிங்கள ராவய தீர்மானம்

தேசிய கீதத்தை தமிழிலும் பாடுவதற்காக அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாதுள்ளதாகவும் எவ்வாறாயினும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அக்மிமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடியில் மாற்றம் மேற்கொள்ள முடியாதெனவும் இந்நிலையில் தமிழ் தேசிய கீதத்தை பாடுவதை அனுமதிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.