செய்திகள்

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு

இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியிலே பாடப்பட வேண்டும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளமை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் வெயவர சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ் அனுமதியை வழங்கிய தேசிய நிறைவேற்றுச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக புத்தாண்டின் பின்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார்.