செய்திகள்

தேசிய கொடி தொடர்பாக சர்ச்சை விமலின் கருத்துக்கு அமைச்சர் மறுப்பு

தேசிய கொடிக்கு பதிலாக மாற்று கொடி ஒன்றை அரசாங்கம் தயாரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து உள்நாட்டலுவல்கள் அமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியின் கௌரவத்தை காப்பாற்ற எடுத்த நடவடிக்கையை விமல் வீரவன்ச தவறாக புரிந்து கொண்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய கொடியை தவறாக தயாரித்து பயன்படுத்துவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் இது தொடர்பில் சட்டத் திட்டங்கள் தயாரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இது குறித்து விமல் வீரவன்ச சரியான தகவல்களை அறிந்து கருத்து வெளியிட வேண்டும் என அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.