செய்திகள்

தேசிய நிறைவேற்றுச் சபையிலிருந்து விலகுவதா? இல்லையா? ஜே.வி.பி இன்று அறிவிக்கும்

 அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்றுச் சபையிலிருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று தீர்மானமெடுக்கவுள்ளது.

இன்றைய தினம் கூடவுள்ள தேசிய நிறைவேற்றுச் சபை கூட்டத்தின் போது தமது தீர்மானத்;தை அறிவிக்கவுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே ஜே.வி.பி தேசிய நிறைவேற்று சபையில் இணைந்து கொண்டிருந்த நிலையில் தற்போதய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு அது தொடர்பாக தீர்மானமொன்றை மேற்கொண்டு அந்த தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.