செய்திகள்

தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்

அட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சத்துணவு மற்றும் பாதுகாப்பான உணவு முறைகளை முன்னெடுத்தல் போன்ற நிகழ்வுகள் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தலைமையில்  இன்று   காலை 11 மணியளவில் இடம்பெற்றன.

இதன்போது சுகாதார அமைச்சின் திட்டத்துக்கு அமைய ‘அதிகபலம், ஆற்றல் மற்றும் உற்பத்தி திறனுக்கு ஆரோக்கியமான உணவுகள்’ எனும் தொனிப் பொருளின் கீழ் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்துவோர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகமும், பேரணியும் நடத்தப்பட்டது.

இப்பேரணி கொட்டகலை ரயில் கடவையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானம் வரை பேரணியாக சென்று அங்கு தேவஸ்தானத்திற்கு முன்பு வீதியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் நடத்தப்பட்டது.

இந் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன, கொட்டகலை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

2 3 4 6