செய்திகள்

தேயிலைத் தொழிற்சாலைக் கழிவால் கறுப்பாக மாறிய ஆற்று நீர்! பொதுமக்கள் விசனம் (படங்கள்)

பொகவந்தலாவ பகுதியிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் கறுப்பு நிறத்தில் நீர் செல்வதனால் கெசல்கமுவ ஓயா ஆற்றைப் பாவிக்கும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலிருந்து கழிவுத் தேயிலைத் தூளை கெசல்கமுவ ஓயா ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் இதனால் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

DSC08518

DSC08521

DSC08529

DSC08537

DSC08540

DSC08550

DSC08556

DSC08558