செய்திகள்

தேர்தலில் தோற்றிருந்தால் என்னை கொன்று புதைத்திருப்பார்கள்

 தான் தோற்றிருந்தால் தன்னை கொலைசெய்திருப்பார்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தனது உயிருக்கு ஆபத்துள்ளது என தெரிந்திருந்தும் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டு;ள்ளார்.

பொலனறுவையில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் தேர்தலில் தோற்றிருந்தால் தான் ஆறடி நிலத்திற்குள் புதையுண்டிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தான் தோற்றால் தன்னை சித்திரவதை செய்வதற்காக தனது பிள்ளைகளை கைதுசெய்வதற்கு மகிந்தராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையை ஏற்பதை தவிரவேறு வழியிருக்கவில்லை, தலைமையை ஏற்றிருக்காவிட்டால் நாடு உடனடியாக தேர்தலை சந்தித்திருக்கும், தேர்தல் நடைபெற்றிருந்தால் 100 நாள் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.