செய்திகள்

தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில் இருவர் ஐ.தே.க வுடன் போட்டியிட தீர்மானம்

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் என்னையும், பதுளையில் அரவிந்தகுமாரையும் ஜக்கிய தேசிய கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிட மலைய மக்கள் முன்னணியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக இன்று அட்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருமான ஏ.லோறன்ஸ், கட்சியின் உபதலைவர் விஜயசந்திரன், நிதி செயலாளர் அரவிந்தகுமார்,  மலையக மக்கள் முன்னணியின் முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தொடர்ந்து செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்..

தற்போதைய ஜனாதிபதி அவரின் மூலம் பெருந்தோட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தினுடாக அதிக படியான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.

தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களிடமும், ஜக்கிய தேசிய கட்சியுடனும் எங்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் மலையக மக்களுடைய தேவைபாடுகளை செய்யும் அளவுக்கு கலந்துரையாடிய பின்னர்  தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடுவோம்.

அத்தோடு இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எங்களது தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி வடக்கு கிழக்கில் உள்ள மலையகத்தை சார்ந்த இரண்டு பேரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் வன்னி மாவட்டத்திலும் போட்டியிட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அது தொடர்பான பேச்சுவாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அவர்களின் வேண்டுகோள்க்கிணங்கவே இந்த தீர்மானம் எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தி சந்திரசேகருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முழு பங்களிப்பினை அவர் வழங்குவதற்கு சம்மந்தம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து வலுப்படுத்தவதற்காக இனக்கம் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் மலையக பகுதியில் உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு தோட்ட உட்கட்மைப்பு அமைச்சினால் வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் மேலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பபோவதாகவும் பிரதமரின் விசேட வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதியில் 25 பாடசாலைகள் இணங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தார்.