செய்திகள்

தேர்தலை எதிர்க்கொள்ள தயார் ; பிரதமர்

தாம் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று குருநாகல் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு போதும் விமானம் வராத விமான நிலையத்தை அமைக்கப்போவதில்லை. கப்பல் வராத துறைமுகம் அமைக்கப்போவதில்லை. கிரிக்கெட் நடக்காத மைதானம் அமைக்கப்போவில்லை. வீதி அபிவிருத்தியென கூறி கொமிஸ் அடிக்க போவதில்லை.
மக்களுக்கான சேவைகளையே செய்யப்போகின்றோம். அதற்காகவே நாம் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூறுகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.