செய்திகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் செயற்பாட்டுக் குழு

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் செயற்பாட்டுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடு ஏற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான விசாரணை குறித்த பொலிஸ் செயற்பாட்டுக் கட்டமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இடையே விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்பின் உத்தியோகபூர்வமாக தேர்தல் பணிகளை தொடங்கவுள்ளதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.