செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் காரணமாக அதன் மீதான நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது – ஜி.எல்.பீரிஸ்

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படவேண்டும். 17 ஆவது அரசமைப்பிற்கு இணங்க ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முக்கியமாக கருதப்படுகிறது.இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான ரட்ணஜீவன் ஹுல், பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக இரண்டு சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியுள்ளன. இதிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு இரண்டு விதமான நிலைபாட்டுடன் இருப்பது உறுதியாகியுள்ளது.இதிலிருந்து ஆணைக்குழு மீதான நம்பிக்கை இன்று இல்லாது போயுள்ளது“ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான ரட்ணஜீவன் ஹுல், பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதே நிலைப்பாட்டைக் கொண்ட பல கட்சிகள் இருக்கின்றன. அதேநேரம், தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இந்த விடயத்தில் சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த நிலைமை நாட்டில் இல்லை.சுயாதீன நிலைமையில் ஆணைக்குழு செயற்படுவதில்லை. இரண்டு விதமான நிலைப்பாடுகள் உயர்நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்துள்ளார்.(15)