செய்திகள்

தேர்தல் திருத்த விவகாரம் : சிறுபான்மையின கட்சிகள் நேற்று ஜனாதிபதியை சந்தித்து தமது நிபந்தனைகளை முன்வைத்தது

சிறுபான்மையின கட்சிகளின் பிரதிநிதகள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால    சிறிசேனவை சந்தித்து தேர்தல் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நேற்று மாலை  ஜனாதிபதியின் பிரத்தியேக  வாசஸ்தளத்தில் இந்தசந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தழிழ் தேசிய கூட்டமைப்பு , ஜனநாயக மக்கள் முன்னணி , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர தேசிய  சங்கம் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள்   ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது     வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் அதற்கு ஏற்றால் போல் புதிய தொகுதிகளை அமைக்க வேண்டும் வடக்கில் தொகுதி குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது போன்ற யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதுடன் அதனை கேட்டறிந்து கொண்டுள்ள  அவர்   இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்து இது தொடர்பான தீர்மானமொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.