செய்திகள்

தேர்தல் முறையை மாற்றுவதா? சிறுபான்மையினக் கட்சிகள் ஆராயத் திட்டம்

தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக தேசிய நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் 19ஆவது திருத்தச்சட்­டத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் சபையில் சமர்ப்­பிப்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

எவன்கார்ட் பாது­காப்பு நிறு­வன விவ­காரம் குறித்து குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் சிறு­பான்மை கட்­சிகள் அடுத்த வார இறு­திக்குள் தேர்தல் முறைமை சீர்­தி­ருத்தம் தொடர்­பாக விசேட கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டு­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தேசிய நிறை­வேற்று சபையின் கூட்டம் நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் கட்சித் தலை­வர்­களின் பங்­கேற்­புடன் அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதன்­போது இரண்டு முக்­கிய விட­யங்கள் குறித்து விசே­ட­மாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக தேர்தல் சீர்­தி­ருத்தம் தொடர்­பாக பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன.

அமைச்­ச­ர­வைப்­பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன மற்றும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் இணைத் தலை­வரும் கோட்டே சதஹம் செவன விகா­ரா­தி­ப­தி­யு­மான அத்­து­ர­லிய ரத்ன தேரர் ஆகியோர் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் வலி­யு­றுத்­தி­ய­துடன் தேர்தல் முறை , நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை மாற்­றத்தை கொண்டு வரு­வ­தற்­கான சட்­ட­மூ­லங்கள் ஒரே­நே­ரத்­தி­லேயே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தினர்.

அதே­நேரம் பெரும்­பான்மை அர­சியல் கட்­சிகள் மோச­மான அர­சியல் கலா­சா­ரத்­திற்குள் காணப்­ப­டு­கின்­றன எனக்­கு­றிப்­பிட்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க விருப்பு வாக்­கு­முறை அத்­தி­யா­வ­சி­ய­மில்லை எனக் கூறி­ய­துடன் பாரா­ளு­மன்ற பிர­தி­நித்­து­வங்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தா­த­வாறும், சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தா­த­வாறும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அதுவே உண்­மை­யான ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன் போது ஜனா­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை. தற்­போ­துள்ள விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­யினால் ஒர­ள­வெனும் சிறு­பான்மை மக்கள் பிர­தி­நி­தித்­து­வங்கள் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­நி­லையில் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான எந்­த­வொரு முறை­மையைும் எம்மால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது என உறு­தி­யாக கூறினார்.

அத்­துடன் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­களை குறைக்கும் வகையில் அமைந்­துள்ள முன்னாள் அமைச்சர் தினேஷ் குண­வர்த்­த­ன­வினால் முன்­மொ­ழி­யப்­பட்ட தேர்தல் முறைமை தொடர்­பான பரிந்­து­ரையை ஏற்­க­மு­டி­யா­தெ­னவும் மனோ­க­ணேசன் தெரி­வித்­தி­ருந்தார். அதன் போது சில பெரும்­பான்மை கட்­சியின் தலை­வர்­களும் அதனை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனைத் தொடர்ந்து சிறு­பான்மை கட்­சிகள் அனைத்தும் அடுத்­த­வார இறு­திக்குள் தேர்தல் முறைமை சீர்­தி­ருத்தம் தொடர்­பாக விசேட கலந்­து­ரை­யா­ட­லென்றில் ஈடு­ப­டு­வ­தெ­னவும் இதன் போது எடுக்­கப்­படும் முடி­வுகள் தேர்தல் முறைமை சீர்­தி­ருத்­ததின் போது உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.