செய்திகள்

தேர்தல் முறை திருத்தத்திற்கு பின்னரே 19 செயற்படுத்தப்பட வேண்டும்: ஸ்ரீ.சு.க அரசாங்கத்தை கோர தீர்மானம்

தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் அந்தக்கட்சி தமது யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்;ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளாது 19வது திருத்தத்தை செயற்படுத்தவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இணங்கவில்லையெனவும் இதனால் இது தொடர்பாக தமது யோசனையொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கு அந்த கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.