செய்திகள்

தேர்தல் வெற்றிக்காக இனப்பதற்றத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவும் நிலையிலுள்ள அரசாங்கம் இனவெறியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முனைவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளர் மாதுளவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கான தொழிற்சங்க கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியை கைவிடுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
மைத்திரிபாலசிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்காக எதிர்கட்சிகள் பாடுபடவில்லை, நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதே இறுதிநோக்கம், நிறைவேற்று அதிகார முறையே நாடு எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு காரணம்.
தற்போது நாங்கள் வெறுமனே மாற்றத்திற்காக முயலவில்லை, பாரிய புரட்சியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.