செய்திகள்

தேர்ஸ்டன் கல்லூரி நீச்சல் தடகாத்திலிருந்து சடலமொன்று மீட்பு

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் நீச்சல் தடாகத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக மஹரகம பகுதியை சேர்ந்த 53 வயதுடைய அந்த கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கருவாத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.