செய்திகள்

தேவாலயத்திற்குச் சென்ற யுவதியை காணவில்லை

தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் கிழக்கை சேர்ந்த உ.ஸ்டெல்லா (வயது 20) எனும் யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.

அதனை அடுத்து பெற்றோரால் ஞாயிற்றுக்கிழமை காலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.