செய்திகள்

”தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹிட்டலாராகவும் மாறலாம்” என்கிறார் இராஜாங்க அமைச்சர திலும் அமுனுகம

ஜனாதிபதி ஹிட்லராக மாறினால்தான் அரசு மீது பழி சுமத்தும் செயற்பாடுகள் நிற்கும் என்று எண்ணுவதாக போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனால் தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி சார்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பார் என்றே மக்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதனால் அரசாங்கம் மீது மக்கள் குறை கூறுகின்றார்கள். பௌத்த தேரர்களும் ஜனாதிபதி, ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும் என்றே கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதியினால் ஒரே தடவையில் அப்படி மாற முடியாது. சிலரின் செயற்பாடுகள் அவரை அப்படி மாற்றிவிடாலம். அப்படி ஹிட்லாராக மாறினால் அரசு மீதான பழிகள் நின்றுவிடும் என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார். -(3)