செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை ரூபா 800 ஆக உயர்த்த வேண்டும் – ஜே.வீ.பீ தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை ரூபா 800 ஆக உயர்த்த வேண்டும் எனவும், கூட்டு உடன்படிக்கையையும் துரிதப்படுத்த வேண்டும் என கோரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தலையீட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரியும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரனினால் 07.06.2015 அன்று அட்டன் நகரில் துண்டு பிரசுரம் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது சங்கத்தின் பொருளாளர், மாவட்ட அமைப்பாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.