செய்திகள்

தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளம் ரூபா 800 வழங்க வேண்டும் – அட்டனில் கருத்தரங்கு

ஜே.வி.பியின் தலைமையில் கீழ் இயங்கும் அகில இலங்கை தோட்ட தொழிலாளா் சங்கத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ரூபா 800 வழங்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் கருத்தரங்கு இன்று அட்டன் தபால் நிலைய கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவா் இராமலிங்கம் சந்திரசேகா் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சங்கத்தின் தலைவா் இராமலிங்கம் சந்திரசேகா் கருத்து தெரிவிக்கையில்….

எதிர்வரும் மார்ச் 31ம் திகதியுடன் காலாவதியாகும் தோட்ட தொழிலாளர்களின் கூட்டு உடன்படிக்கையை தொடர்ந்து புதிய கூட்டு உடன்படிக்கை மூலமாக தோட்ட தொழிலாளரின் அடிப்படை நாட் சம்பளம் ரூபா 800 ஆக உயர வேண்டும். காரணம் அரசு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி 4 பேரைக் கொண்ட தோட்ட தொழிலாளா் குடும்பத்திற்கான மாத செலவு ரூபா 29779 என கணிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானல் இன்று தோட்ட தொழிலாளர்களின் மாத வருமானம் 11,250 ஆகும். ஆனால் பல தொழிலாளா்களுக்கு இத்தொகை கிடைப்பதும் இல்லை. எனவே எம்மக்களின் நாட்சம்பளம் 1000-2000 ரூபாவாக உயர வேண்டும். ஆனால் நாட்டின் ஆட்சியாளர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட தொழில் சட்டம், சம்பள நிர்ணய சட்டம் என்பதன் மூலம் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. இவ்விதி முறையை நாம் எதிர்ப்பதுடன் இதன் அடிப்படையில் தான் எம் மக்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும் என்றால் கட்டாயம் அடிப்படை சம்பளம் ரூபா 800 வழங்க முதலாளித்துவ சம்மேளனம் முன்வர வேண்டும் என்றார்.

மேலும் தோட்ட தொழிலாளா்கள் போலவே தோட்ட உத்தியோகஸ்தா்களும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனா். குறிப்பாக தனது வாழ் நாள் முழுவதும் தேயிலை செடியுடன் வாழ்கின்ற இவர்களுக்கு தொழிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு இருப்பதற்கு சொந்தமான வீடு கூட இல்லை என கூறியதுடன் இன்று மலையக அரசியல்வாதிகள் பொய்யான போர் கொடியை தூக்கி பிடித்து கொண்டுள்ளனா். மலையகத்தின் ஏக பிரதிநிதிகள் என கூறிய தொண்டமான் அவா்கள் அரசியலில் வீழ்ந்துள்ளார்.

இவ்வீழ்ச்சியில் இருந்து மேல் எழும்புவதற்காக ”பார் வேண்டாம்” என்ற போர் கொடியை ஏந்திகொண்டு மலையக முழுவதும் உலாவுகின்றார். மலையகத்தில் மது பாவனை அதிகம் என வெளியான அரச புள்ளிவிபர தகவலை கடந்த காலங்களில் நான் வெளியிட்ட போது இ.தோ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினா் சக்திவேல் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் இன்று இவா்களே ஆர்ப்பாட்டம் செய்வது நியாயம் இல்லை.

அதேபோல் புதிய அமைச்சர் திகாம்பரம் அவா்களினால் மலையக மக்களுக்கு வீடு கட்ட இந்திய பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டுவார் என கூறினார். ஆனால் மோடி வந்தவுடன் மலையக மக்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதற்கு மலைய அரசியல்வாதிகள் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே இவா்கள் அணைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள தயாராகுகின்றார்கள் என்பதே உண்மை.

எனவே மலையக மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்கு தலைமை தாங்க நாம் தயார். அதற்காக அனைவரும் எம்மோடு அணித்திரள வேண்டும் என்றார்.

IMAG0654

IMAG0655

IMAG0653

IMAG0652