செய்திகள்

நடிகர் விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு – எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை

நடிகர் விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.

நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது. விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-(3)