செய்திகள்

நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொதப்புவதால் தடுமாறும் சன்ரைசர்ஸ்

ஐபிஎல்லின் இந்த வருட போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் தொடர்ந்தும் தடுமாறிவருகின்றமை அணியின் வெற்றியை மோசமாக பாதித்துள்ளது.

சனிக்கிழமை மும்பாய் அணியுடனான வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டி கைநழுவிப்போவதற்கும் நடுவரிசையே காரணம். இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வை காண்பது என தெரியாமல் நிர்வாகம் தடுhறுகின்றது. அதுவரை அணி பெற்றுள்ள 893 ஓட்டங்களில் 459 ஓட்டங்களை ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களான தவானும், டேவிட் வோர்னரும் பெற்றுள்ளனர்.ஏனைய வீரர்களால் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களை பின்பற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.

211785நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் விழித்தெழுந்து அணிக்காக ஓட்டங்களை பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது என மும்பாய் தோல்வியின் பின்னர் கேஎல் ராகுல் தெரிவித்தார்.

நடுவரிசை வீரர்கள் தொடர்ந்தும் இவ்வாறு விளையானொல் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் மீது அழுத்தங்கள் அதிகமாக போகின்றன என அவர் தெரிவித்தார்.
நடுவரிசையில் அடித்தாட கூடிய வீரர்கள் உள்ளனர் எனினும் அவர்கள் இன்னமும் சிறப்பாக விளையாட தொடங்கவில்லை இது குறித்து நாங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் மும்பாயுடனான போட்டியில் மிகவும் சிரமப்பட்டு 27 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்தார்.ரவி போப்ராவுடன் இணைந்து அவர்கள் 6 ஓவர்களில் 36 ஓட்டங்களையே பெற்றனர்.அதுவே ஆட்டத்தின் போக்கை அணிக்கு எதிராக மாற்றியிருந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் ஆறு ஓவர்களில் 52 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.