செய்திகள்

நடுவானில் போதையில் ரகளை: கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்ட விமானம்

போதையிலிருந்த பயணி ஒருவரின் தொந்தரவு காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் கோலாலம்பூர் திரும்பிச் சென்றுள்ளது.

சனிக்கிழமை பின்னிரவு 11.27 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட எம்.எச்.179 என்ற விமானமே இவ்வாறு சென்றுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு விமானத்தை மீண்டும் கோலாலம்பூரில் தரையிறக்குவதற்கு விமானி தீர்மானித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போதையிலிருந்த பருமனான உடல் அமைப்பைக்கொண்ட பயணி ஒருவரே விமானத்தில் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஏனைய பயணிகள் விமானத்தை திருப்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானத்தை மீண்டும் கோலாலம்பூரில் தரையிறக்குவதற்கு விமானி திட்டமிட்டதாக மலேஷியன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்டதும் குறித்த பயணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், நேற்றுக்காலை 10.06 மணிக்கு குறித்த விமானம் கோலாலம்பூரிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்தது.

குறித்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் மலாக்கா நீரிணைக்கு மேல் சுமார் 2 மணித்தியாலங்கள் வட்ட மடித்துள்ளமை ராடர்களில் பதிவாகி யுள்ளது.