செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அவர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தெளிவூட்ட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக கம்மன்பில மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. அந்தப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அது தொடர்பில் கலந்துரையாடியுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினர், பிரேணையை தோற்கடிப்பதற்காக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அவர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தெளிவூட்ட தீர்மானித்துள்ளனர்.
-(3)