செய்திகள்

நல்லூர் நாவலர் மணிமண்டபத்தில் யோகாசனப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.நாவலர் மணிமண்டபத்தில் 2014,2015 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட இலவச யோகாசனப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

குறித்த காலப் பகுதியில் முழுமையாகப் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்கள் நாளை-28 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் நாவலர் மணிமண்டபத்தில் கடமையாற்றும் இந்து அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் நிருபர்-