செய்திகள்

நவ ஜோகோவிக் மற்றும் மடிசன் கீஸ் ஆஸி ஓபன் அரை இறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்னில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில் இன்றைய தினம் உலகின் முதல் தர வீரரான சேர்பிய நாட்டு வீரர் நவ ஜோகோவிக் (27வயது) அவரை எதிர்த்தாடிய கனடிய வீரரான மைலோ ரொனிக்கை (24வயது) 7-6 (7-5), 6-4, 6-2 என்னும் செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கணையான மடிசன் கீஸ் (19வயது) அவரை எதிர்த்து விளையாடிய அதே நாட்டு வீராங்கணையான வீனஸ் வில்லியமை (34வயது) 6-3, 4-6, 6-4 என்னும் செட் கணக்கில் வென்று அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.keys