செய்திகள்

நவ ஜோகோவிக் 5வது அவுஸ்திரேலிய ஓபன் க்ரண்ட் சலாம் பட்டத்தை வென்றார்

மெல்போர்னில் நடைபெற்றுவந்த  அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நேற்றைய இறுதி போட்டியில் உலகின் முதல் தர வீரரான சேர்பிய நாட்டு வீரர் நவ ஜோகோவிக் (27வயது) அவரை எதிர்த்தாடிய பிரித்தானிய  வீரர் அன்டி முர்ரேயை (27வயது) 7-6 (7-5), 6-7 (4-7), 6-3, 6-0  என்னும் செட் கணக்கில் வீழ்த்தி 5வது அவுஸ்திரேலிய ஓபன் க்ரண்ட் சலாம் பட்டத்தை தனதாகிக்கொண்டார். இது இவர் பெற்ற  அன்டி முர்ரேக்கு எதிரான 3வது வெற்றி மற்றும் 8வது க்ரண்ட் சலாம் பட்டமும் என்பது குறிபிடதக்கது.dt.common.streams.StreamServer