செய்திகள்

நாடாளுமன்றத்தை இப்போதைக்கே கலைப்பது நல்லது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தொடர்பான பிரச்சினைகளை கையாளக் கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைப்பது பொருத்தமாக இருக்குமென கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தெரிவித்திருக்கின்றது. .

இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதற்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்குமான நியமனங்கள் பற்றி சர்வதேச கருத்தாடல்களை நடத்திவருவதாக த.தே.கூ பின் பேச்சாளரும் ; நாடாளுமன்ற உறுப்பினருமான  சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆயினும் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி கூட்டமைப்புக்கு தெரியாது என பிரேமச்சந்திரன் கூறினார் .

‘விஞ்ஞாபனம் தயாரிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடவென பல குழுக்களையும் நாம் அழைத்துள்ளோம். கூட்டமைப்பில் உள்ள கட்சி ஒவ்வொன்றினதும் வேட்பாளர்களை என்ன அடிப்படையில் தெரிவு செய்வது என்பது பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம்’.என அவர் கூறினார்.

‘புதிய நாடாளுமன்றம் அமைவதை நாம் விரும்புகின்றோம் .பொது தேர்தலின் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்மானங்கள் எடுக்கப்படுமென இந்த அரசாங்கம் கூறியிருக்கிறது.எனவே தேர்தல் வருவதை நாமும் விரும்புகின்றோம்’ என்றார்.