செய்திகள்

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி விசேட கட்டளை

பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையை மீண்டும் பிறப்பித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 வது ஷரத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஜனாதிபதி, இந்த கட்டளை பிறப்பித்துள்ளார்.சபாநாயகர், நாடாளுமன்ற சபை நடவடிக்கைளில் ஆரம்பத்தில் இந்த கட்டளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)