செய்திகள்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையென்ன? நிமல் கேள்வி

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில்  இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமெனவும்  எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார். புலிகள் இலங்கையில் தோற் கடிக்கப்பட்ட போதும் அதன் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருகிறது. பணம் திரட் டப்படுகிறது. எமது நாட்டின் மீதான அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணை க்களம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச் சுறுத்தல் காணப்படுகிறது. இந்த அச்சுற்த்தலில் இருந்து மீள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மக்கள் அவதானமாக உள்ளனர். எமது அரசாங்கம் புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கவில்லை.
தேசிய பாது காப்பிற்கு முன்னிரிமை வழங்கினோம் ஆனால் தற்போது அச்சுறுத்தல் நிலைமை காணப்படுகின்றது. இதற்கு எதிரக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.