செய்திகள்

நாட்டில் இன்னும் நல்லாட்சி ஏற்படவில்லை : ஜனாதிபதி

ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர்  புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் இன்னும் நல்லாட்சி  அமையப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு நான் இணங்க மாட்டேன். இன்னும் நல்லாட்சி ஏற்படவில்லை. ஆனால்  நல்லாட்சிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் ஆட்சி  , சுதந்திரம் , ஜனநாயக உரிமைகள் எல்லாம் இல்லாது செய்யப்பட்டிருந்த நாட்டில் அவற்றை உடனடியாக கட்டியெழுப்ப முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.