செய்திகள்

நாட்டில் கொவிட் மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் நேற்று 93 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 836 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் தினசரி கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(3)