செய்திகள்

நாட்டில் நல்லாட்சி உருவாகுவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டம் வழிவகுக்கும்

நாட்டில் நல்லாட்சி உருவாகுவதற்கும்,நாட்டில் சுதந்திரமான ஆணைக் குழுக்கள் உருவாகுவதற்கும் 19 ஆவது திருத்தச் சட்டம் வழி வகுக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

19 ஆவது அரசியல் சீர்திருத்தம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

19 ஆவது திருத்தச் சட்டத்தில் தமிழ்மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய விடயங்கள் இல்லாவிட்டாலும் கூட ஒட்டு மொத்தமான இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தச் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை முற்போக்கான விடயம்.

அது மாத்திரமல்லாமல் ஒரு சர்வதிகார ஆட்சிக்கு விடை கொடுத்து ஜனநாயகபூர்வமான ஆட்சி இதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்றார்.

யாழ்.நகர் நிருபர்-