செய்திகள்

நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும்

தற்போது நாட்டின் நிலைமை மிக மோசடைந்து செல்கின்றது எதிர்வரும் காலங்கள் தொ்றறாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த எண்ணிக்கையானது 2 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தற்போதை இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்துகொள்ள முடியும். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று சுகாதார கட்டமைப்பு என்ற ரீதியில் விரைவாக தொற்றாளர்களை அடையாளங்கண்டு நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல் அல்லது இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் அனுமதித்தல் அல்லது ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதா அல்லது நோயாளர்களை விரைவாக அடையாளங்கண்டு தனிமைப்படுத்தி நோயை அடையாளங்காண்பதா என்பது ஒருபுறத்தில் தீர்மானிக்கப்படும்.மறு புறத்தில் இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சார்பில் வழங்கப்படும் பங்களிப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.இவ்வாறான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதில் வைத்தியசாலைகளுக்கு பாரிய பொறுப்பு உண்டு. கடந்த சில தினங்களாக அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையை நாம் அவதானித்தோம் என தெரிவித்துள்ளார்.(15)