செய்திகள்

நாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் கம்பஹா மாவட்டம் − கடவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்தெனிய கிழக்கு கிராம சேவகர் பிரிவு, சூரியபாலுவ தெற்கு கிராம சேவகர் பிரிவு, சூரியபாலுவ வடக்கு கிராம சேவகர் பிரிவு பஹல கரகஹமுண வடக்கு கிராம சேவகர் பிரிவு, இஹல கரகஹமுன வடக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம் − பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பிட கிராம சேவகர் பிரிவு , கெஸ்பேவ கிழக்கு கிராம சேவகர் பிரிவு, மாகந்தர மேற்கு கிராம சேவகர் பிரிவு, நிவுன்கம கிராம சேவகர் பிரிவு பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு.களுத்துறை மாவட்டம் − அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு, மத்துகம பொலிஸ் பிரிவு, யட்டியன மேற்கு கிராம சேவகர் பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.(15)