செய்திகள்

நான் இன்னும் பார்வையாளன்தான்: மகிந்த ராஜபக்‌ஷ

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நாரஹேன்பிட்டிய அபயாராமயவிற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரை அழைத்திருந்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் சிலர் இன்று பகல் அபயாராமவிற்கு சென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதுடன், பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் இதில் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: மாத்தறையில் உங்களுக்காக நடத்திய கூட்டத்தில் நீங்கள் ஏன் பார்வையாளராகக் கலந்துகொண்டீர்கள்?

மஹிந்த ராஜபக்ஷ: எனக்காக! நான் இன்னும் பார்வையாளன் தான்.

ஊடகவியலாளர்: 20ஆவது அரசியலமைப்பின் கீழ் புதிய தேர்தலை நடத்தினால் அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையுமா?

மஹிந்த ராஜபக்ஷ: சிறந்ததாகும். புதிய முறையின் ஊடாக தேர்தலை நடத்துவது எமக்கு வசதியாக அமையும்.

ஊடகவியலாளர்: புதிய தேர்தல் முறை வந்தால் மாத்திரமா நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்கள்?

மஹிந்த ராஜபக்ஷ: இரண்டுமே இலகுவானது. எதிர்க்கட்சிக்கும் பயனுள்ளதாக அமையும். ஆளுங்கட்சியிலுள்ளவர்களுக்கு கடினமாக அமையும்.