செய்திகள்

நாமலின் நீலப்படையணி ஒழிக்கப்பட்டது: சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகனும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் இறங்கிய நீலப்படையணி இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. டி

நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது.  எங்களிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகள் மட்டுமே இருந்தன. கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இணை அமைப்புகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என்று அவர் மேலும் கூறினார்.