செய்திகள்

நாமல் சீ.ஐ.டி.யில் (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை முதல் கொழும்பு இரகசிய பொலிஸ் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையொன்றுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 8.45 மணியளவில் அங்கு சென்றுள்ள நிலையில் தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
அகுனுபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டமொன்றில்  நாமலின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவர் கைத்துப்பாக்கியுடன் அங்கு சென்ற விடயம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் என்ன விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகின்றது என இதுவரை உறுதியாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
02
01