செய்திகள்

நாற்பது வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வாக்களிப்பு வீதம் பகல் 12 மணிவரை குறிப்பிடத்தக்களவிற்கு அதிகமானதாக காணப்பட்டுள்ளதாகவும் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், கம்பஹாவில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கண்டியில் 60 வீதமானவர்களும்,மாத்தளையில் 40 வீதமானவர்களும், மாத்தறையில் 45 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்என தெரிவித்துள்ளது.
மதியத்திற்கு பின்னர் வாக்களிப்பு இதனை விட இன்னும் அதிகமாக காணப்படும்,பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை,எனவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.