செய்திகள்

நாளை இரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை வரை நாடு முழுவதும் பயண தடை

நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் இடம்பெறும், தடுப்பூசிவழங்கும் நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்திற்கான மருத்துவமனைகளிற்கான பயணம் போக்குவரத்துகட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்படாது என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவைப் போன்ற குறித்த பயணத் தடை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும், அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்படும் என்ற சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட முடிவை இரத்து செய்து இந்த புதிய அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.(15)