செய்திகள்

நாளை காலை முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும்

கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சில தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 மாவட்டங்களைச் சேர்ந்த 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
-(3)