செய்திகள்

நிதிமோசடி பிரிவில் நாளை சிராந்தி ராஜபக்ச சாட்சியமளிக்கிறார்

கால்டன் சிரிலிவிய சவிய வேலைத்திட்டம் மற்றும் பல மனிதாபிமான செயற்பாடுகளின்போது நிதி முறையற்றவகையில் கையாளப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சவிடம் நிதிமோசடி குற்றபுலனாய்வு திணைக்களம் விசாரிக்கவுள்ளது.

நாளை சிராந்தி சாட்சியமளிப்பார் என அவரது ஊடகசெயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த ஆட்சியில் அரசியலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என ஊடக செயலாளர் அனோம வெளிவிட்ட தெரிவித்தார்.