செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவை இல்லாது செய்வோம் : நிமல் சிறிபால

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தமது அரசாங்கத்தில் நிதி மோசடி விசாரணை பிரிவை இல்லாது செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணை பிரிவானது  அரசியல் எதிரிகளுக்கு தண்டனை வழங்கும் வகையிலேயே  அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனநாயகத்துக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளை விசாரிக்கவென இந்த பிரிவு தேவையில்லை பொலிஸ் திணைக்களத்தின் விசாரணை பிரிவுகள் போதுமானது. நாம் அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் அதன்போது அந்த பிரிவை இல்லாது செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.