செய்திகள்

நியூயோர்க்கில் பொலிஸ் அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் பால்டிமோரை தொடர்ந்து, நியூயோர்க் நகரிலும் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவின், பால்டிமோரில் கடந்த 27ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட கிரே என்ற 27 வயது கருப்பின இளைஞர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பால்டிமோரில் ஆர்ப்பாட்டங்களும், வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றதால், அங்கு ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பால்டிமோரை தொடர்ந்து, நியுயார்க்கில் நகரில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.