செய்திகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கமாறு நாம் ஒரு போதும் கூறியதில்லை: சம்பிக்க ரணவக்க –

தமது கட்சி ஒருபோதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென கூறியதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறாக தாம் கூறியதாக உறுதிப்படுத்தினால் தான் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகுவதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று இரவு நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் , நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதிக்கிடையே சமமான வகையில் அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பாகவே கூறி வந்தோம். ஆனால் ஒரு போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென கூறவில்லை. அவ்வாறு கூறியதாக உறுதிப்படுத்தினால் தான் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வேன். என அவர் தெரிவித்துள்ளார்.