செய்திகள்

”நீண்ட காலமாக சிறைகளில் உள்ள இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்”: நாமல் கோரிக்கை!

வழக்கு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க பொறிமுறையை செயற்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறும் பேதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அவர்களை தண்டிப்பதற்கும் விடுவிப்பதற்கும் ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்றார்.
-(3)