செய்திகள்

நீதிமன்றத் தாக்குதல்: வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

வட மாகாணம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக் கணிப்பு செய்யவுள்ளதாக யாழ். சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிவித்தது. வட மாகாணத்திலுள்ள சகல சட்டத்தரணிகளையும் இந்த பணிப் புறக்கணிப்பில் கலந்துகொள்ளுமாறும் சட்டத்தரணியும், ஓய்வுபெற்ற நீதியரசருமான இ. விக்னராஜா தெரிவித்தார்.

யாழ். நீதிமன்ற கட்டடம் தாக்கப் பட்டமையை கண்டித்தும் சட்ட த்தின் ஆதிக்கத்துக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்து இவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களி லுள்ள சட்டத்தரணிகளுக்கும் இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.